வண்டி புகை அளக்க வண்டி வண்டியாய் நுகர்வோர்களை ஏமாற்றும் வாகன புகை பரிசோதனை நிலையங்கள் ஆம் ஆத்மி கட்சியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 16 November 2022

வண்டி புகை அளக்க வண்டி வண்டியாய் நுகர்வோர்களை ஏமாற்றும் வாகன புகை பரிசோதனை நிலையங்கள் ஆம் ஆத்மி கட்சியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

திருப்பூர் மாவட்டத்தில் பல லட்சக்கணக்கான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் மோட்டார் வாகன சட்டப் படி இந்த வாகனங்களுக்கு புகை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் திருப்பூரில் புகை சான்று பெற ஆம் ஆத்மி கட்சி ஊடக பிரிவு தலைவர் டி.சரவணன் திருமுருகன் புகைச்சான்று நிலையத்திற்கு சென்றதாகவும் அந்த நிறுவனம் புகைச்சான்று அளிக்க அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ 60க்கும் பதிலாக ரூ150 ஐ கட்டாயப்படுத்தி கேட்டு வாங்கியதாகவும் அரசு நிர்ணயம் செய்து தொகையை வாங்காமல் அதிகமாக கட்டணம் பெறுகிறீர்கள் ஏன் என்று கேட்டதாகவும் அதற்கு அந்த நிறுவனம் நாங்கள் மாமூல் கொடுப்பதால் அதிகமாக வாங்குகிறோம் திருப்பூர் மாவட்டத்திற்கு எங்கு சென்றாலும் இதே கட்டணம் தான் வாங்குவார்கள் ஆணித்தரமாக கூறுகிறார்கள், என்றும் இந்த நிறுவனங்கள் செய்யும் சட்டத்திற்கு புறம்பான செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் புகை பரிசோதனை நிலையங்களில் முன்புறம் மக்களுக்கு தெரியும் வகையில் கட்டண விவரங்களை பதாகையாக எழுதி வைக்க வேண்டும், அதிகமாக வசூலித்தால் புகார் செய்ய ஏதுவாக புகார் எண் எழுதி வைக்க வேண்டும் என தனது புகாரில் கூறியுள்ளார் இந்த புகாரை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினித் ஐஏஎஸ் அவர்களிடம் திருப்பூர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநகர ஊடக பிரிவு தலைவர் டி.சரவணன் மாவட்ட துணைத் தலைவர் பாலாஜி தங்கவேல் தெற்கு சட்டமன்ற செயலாளர் சிவசங்கர் இளைஞர் அணி தலைவர் டி எஸ் முருகேஷ் இளைஞரணி செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் மனு கொடுத்தார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad