திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் கீரா, இவரது தந்தை மக்பூல் அதிமுகவில் உடுமலை நகரப் செயலாளராகவும், நகராட்சி கவுன்சிலராகவும் இருந்துள்ளார். மக்பூல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறந்து விட்டார் இதனை அடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டி வழக்கு பதிவு செய்ய உடுமலை காவல் நிலையம் சென்றுள்ளார், அப்போது பணியில் இருந்த காவலர் சேகர் என்பவர் உதவி ஆய்வாளருக்கு பணம் தர வேண்டும் எனக் கூறி ரூ5ஆயிரம் பெற்றுள்ளார்.

மேலும் இது போல் திருப்பூர் மாவட்டம் குன்னத்துரை சேர்ந்த கிஷோர் குமார் என்பவர் ஜேசிபி வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார் இந்நிலையில் பொய் புகாரின் பேரில் ஜேசிபி வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர் என்றும் பறிமுதல் செய்த வாகனத்தை விடுவிக்க கிஷோர்குமாரை வற்புறுத்தி லஞ்சமாக குன்றத்தூர் போலீசார் பணம் பெற்றுள்ளதாகவும் இவ்வாறு வற்புறுத்தி லஞ்சமாக பெற்ற பணத்தை திரும்ப பெற்று தரக் கோரி பாதிக்கப்பட்டவர்களுடன் நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

No comments:
Post a Comment