திருப்பூர் மாநகரம் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில் கடந்த 10 வருடங்களாக பொதுமக்களுக்கு இடையூறு இன்றி தொழுகை நடைபெற்று வரும் பள்ளிவாசல் முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி ஒழுக்கம் வளர்ச்சிக்காக தேசிய பணிகளுக்கு தம்மை அர்ப்பணித்து கொண்டும் மாதம்தோறும் அனைத்து சமுதாய ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் கொடுத்தும் தமிழக வக்போர்டு வாரியத்திடம் பள்ளிவாசலை ஒப்படைத்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல் நிர்வாகம் தமிழக வக்போர்டு வாரியத்திற்கு சகாய நிதி அளித்தும் மத சார்பின்மையின் அடையாளமாக திகழ்ந்துவரும் 15 வேலம்பாளையம் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சமூக பணிகளை தடுக்கும் விதமாக செயல்படுவதை கண்டித்தும் ஆந்திரா தெலுங்கானா கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள சட்ட விதிமுறைகளை பின்பற்றி தமிழகத்திலும் பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் கட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி தேவையில்லை என்ற சட்ட விதிமுறையை சட்டமன்றத்தில் நிறைவேற்ற கோரியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மிகப் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர் பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment