புதிதாக நியாய விலை கடை அமைப்பதற்கான பூமி பூஜை - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 November 2022

புதிதாக நியாய விலை கடை அமைப்பதற்கான பூமி பூஜை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் துங்காவி ஊராட்சி சேர்ந்த உடையார்பாளையம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 10 இலட்சம் மதிப்பில் புதிதாக நியாய விலை கடை அமைப்பதற்கான பூமி பூஜை முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக அவை தலைவருமான திரு.இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் திரு.ஈஸ்வரசாமி மற்றும் மடத்துக்குளம் ஒன்றிய குழு தலைவர்  திருமதி.காவியா ஐயப்பன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளரும் மெட்ராத்தி ஊராட்சி மன்ற தலைவருமான PS.தங்கராஜ் மாவட்ட திமுக பிரதிநிதி எம்.ஜெயக்குமார், மாவட்ட திமுக நெசவாளர் அணி அமைப்பாளர் செந்தில் குமார், ஒன்றிய திமுக துணைச் செயலாளர் செல்வி சேதுபால், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தீபிகா முருகானந்தம், நாகலட்சுமி கலியமூர்த்தி மடத்துக்குளம் நீதிமன்ற திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சங்கர் கணேஷ் திமுக நிர்வாகிகள் சின்ன கருப்புசாமி, சௌந்தரராஜன், ஆனந்த் உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக NA.திருநாவுக்கரசு.B SC.., 

No comments:

Post a Comment

Post Top Ad