திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள எஸ்டி தாமஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர் இவர்கள் காலை மாலை பள்ளிக்கு சென்று வர வேண்டி உள்ளதால் பள்ளியின் முன்னுள்ள பிரதான சாலையில் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் பயணிப்பதால் இந்த பள்ளி குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

மேலும் வாகன போக்குவரத்து இந்த இரு வேளையும் ஸ்தம்பித்து நிற்கும் நிலை உள்ளது இந்த சாலையில் இருபுறமும் ஸ்பீடு பிரேக் போடப்பட்டுள்ளது இந்த ஸ்பீடு பிரேக் மேலே வெள்ளை நிற கோடுகள் அடிக்கவில்லை எச்சரிக்கை பலகைகள் வைக்கவில்லை ஆதலால் வேகமாக வருகின்ற பைக் போன்ற இருசக்கர வாகனங்கள் ஸ்பீடு பிரேக் இருப்பது தெரியாமல் அதன் மேல் ஓட்டுவதால் தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் நிலைமை உள்ளது.
இதில் பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் காலை மாலை பள்ளி கூடும் ,விடும் நேரங்களில் போக்குவரத்தை சரி செய்ய காவல்துறையினர் பணியில் இருக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

No comments:
Post a Comment