உடுமலையில் ஆதி திராவிட தனி வட்டாட்சியர் அலுவலகம் அமைக்கக்கோரி சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 7 November 2022

உடுமலையில் ஆதி திராவிட தனி வட்டாட்சியர் அலுவலகம் அமைக்கக்கோரி சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.


திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் எலையமுத்தூர் பிரிவு பகுதியில் இருந்து பேரணியாக துவங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நிலமற்ற ஏழை விண்ணப்பதாரர்களுக்கு நில ஒப்படைப்பு செய்து பட்டா வழங்க வேண்டும் ஆதிதிராவிட தனி வட்டாட்சியர் அலுவலகம் உடுமலையில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிறுவன தலைவர் தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி தலைவர் கிட்டான் உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் வேலுச்சாமி, முத்து கருப்பன் உடுமலை நகர செயலாளர் சங்கர் உடுமலை மேற்கு நகரச் செயலாளர் சக்கரையன் அந்தியூர் தங்கவேல் மகளிரணி வெங்கடேஸ்வரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad