எலும்பு கூடாக நடுரோட்டில் நிற்கும் மின்சார கம்பம் இது உயிர் பலி வாங்கினால் தான் மாற்றுவார்களா மின்சார அதிகாரிகள்? - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 November 2022

எலும்பு கூடாக நடுரோட்டில் நிற்கும் மின்சார கம்பம் இது உயிர் பலி வாங்கினால் தான் மாற்றுவார்களா மின்சார அதிகாரிகள்?

திருப்பூர் மாநகராட்சியின் 55 வது வார்டு பெருச்சி பாளையம் தெற்கு அண்ணமார் காலனி மூன்றாவது தெருவில் ரோட்டின் நடுவே பொதுமக்களுக்கு இடையூறாக மின்சார கம்பம் இருக்கிறது மேலும் இந்த கம்பம் உடைந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் படு மோசமான நிலையில் உள்ளது இதனால் இந்த தெருவில் ஒரு அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலைமை உள்ளது எப்போது வேண்டுமானாலும் இந்த மின் கம்பம் உடைந்து விழுகும் அபாயம் உள்ளது.

இந்த உடைந்த மின் கம்பத்தை அகற்றாமல் காங்கிரிட் சாலை போடப்பட்டுள்ளது மற்றும் பாதாள சாக்கடை பணிகளும் செய்யப்பட்டுள்ளது இந்தப் பணிகள் செய்யும் பொழுது பணிகளை பார்வையிட வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வரவில்லை என்றும்  பொதுமக்களின் நலனின் அக்கறை இல்லாத மின்வாரிய அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad