உடுமலை நகர மன்ற தலைவர் மு. மத்தீன் பொதுமக்களுக்கு விடுத்துள்ள ஒரு வேண்டுகோள் எதிர் வரும் நாட்களில் பருவமழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது ஆகையால் தங்களது பகுதியில் குப்பைகளை நகராட்சி வசம் நேரடியாக ஒப்படைக்க வேண்டுகிறோம் குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை மழை காலம் முடியும் வரை தங்கள் வீடுகளிலோ வணிக நிறுவனங்களிலோ சேமித்து வைத்து மழைக்காலம் முடிந்தவுடன் நகராட்சி இடம் ஒப்படைக்கலாம்.
நம்முடைய கவனக்குறைவு காரணமாக மழை நீர் வடிகால்களில் பிளாஸ்டிக் பொருட்கள் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் வெளியேற வழி இல்லாமல் போகிறது மேலும் சாலைகளில் மழை வெள்ளம் தேங்குவதால் சாலை பழுதடைகிறது எனவே பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்


No comments:
Post a Comment