அரசு போக்குவரத்து கழக மேலாளருக்கு திருப்பூர் மாநகர துணை மேயர் கடிதம் திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருப்பூர் கிளை மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது திருப்பூர் மாநகராட்சி ஐந்தாவது வார்டு உட்பட்ட வாலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியத்தால் அமைக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் 1200 க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசிக்கின்றார்கள்.

நான் அந்த பகுதிக்கு ஆய்வுக்கு சென்றபோது போதிய போக்குவரத்து வசதி இன்றி மிகவும் சிரமப்படுவதாக இக்குடியிருப்பில் வசிக்கின்ற மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் தெரிவித்தனர் எனவே இங்கு வசிக்கும் பொது மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் அரசு பேருந்து நின்று செல்லும் வகையில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தி தர வேண்டும் மேலும் வாவிபாளையம் வரை வந்து செல்லும் அரசு பேருந்து எண் 11சி, 46, 55, 11 மற்றும் கணக்கம்பாளையம் வரை வந்து செல்லும் பேருந்து எண் 43 ஆகியவற்றின் வழித்தடத்தை மேற்கண்ட குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்லும் வகையில் நீடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment