தேசிய நெடுஞ்சாலையில் கனமழையின் காரணமாக போக்குவரத்திற்கு இடையூறாக தேங்கிய மழை நீரை எம்எல்ஏ மேற்பார்வையுடன் அகற்றப்பட்டது, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் உடுமலை-பழனி நெடுஞ்சாலையில் ராஜாவூர் பிரிவு அருகே அதிக மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறு ஏற்பட்டது.
தகவலை அறிந்த மடத்துக்குளம் எம்எல்ஏ C. மகேந்திரன் மேற்பார்வையிட்டு இயந்திரங்கள் உதவியுடன் தற்காலிக வடிகால் ஏற்படுத்தி தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தி வாகனங்கள் சீராக இயக்க மாற்று வழியும் அமைக்கப்பட்டது.
-தமிழக குரல் செய்திகளுக்காக NA.திருநாவுக்கரசு


No comments:
Post a Comment