திருப்பூரில் திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான பொதுக்கூட்டம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 3 November 2022

திருப்பூரில் திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான பொதுக்கூட்டம்.

தமிழகத்தில் இந்தி  திணிப்பிற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெறும் நிலையில் மத்திய அரசு பல்வேறு வகையில் தமிழகத்தில் இந்தி திணிப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறது இதை கண்டித்து திருப்பூர் மாவட்ட திமுகழகத்தின் சார்பில் 04/11/2022 அன்று  திருப்பூர் ரயில் நிலையம் பெரியார் அண்ணா சிலை அருகில் மாபெரும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறுகிறது.


இதையொட்டி திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக கழக செயலாளர் க. செல்வராஜ், MLA தலைமையில் திருப்பூர் தெற்கு வடக்கு மாநகர செயலாளர் டிகேடிமு நாகராசன், மேயர் என். தினேஷ்குமார் தலைமையில் இந்தியை ஏன் எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் துண்டறிக்கை திருப்பூர் வடக்கு மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.


இதன் ஒரு பகுதியாக காதர்பேட்டை ரயில் நிலையம்  உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது, இதில் திருப்பூர் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள், மாநகராட்சி மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், திமுக மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad