திருப்பூரில் இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் சார்பில் கடனுதவி மானிய உதவி விளக்க கூட்டம் மற்றும் கண்காட்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் கலந்து கொண்டனர், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் திருப்பூர் கிளை சார்பாக நடைபெற்ற கடன் உதவி மற்றும் மானிய உதவி பற்றிய விளக்கக் கூட்டத்தில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மாநகராட்சி மேயர் என்.தினேஷ்குமார், தெற்கு மாநகர திமுகழக செயலாளர் டிகேடிமு. நாகராசன் மாநகர ஆணையாளர் கிராந்தி குமார் பாடி மற்றும் துணை மேயர் ஆர். பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு வங்கிகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.
இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் திவாகர், மாமன்ற துணைச் செயலாளர் மற்றும் வட்டக் திமுக செயலாளர் டிஜிட்டல் சேகர், பட்டய கணக்காளர்களும் மற்றும் பல்வேறு வங்கி நிறுவனங்களும் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment