திருப்பூர் காலேஜ் ரோடு ஐயப்பன் கோவில் முன்பு உயர்மட்ட நிழற்கூறையினை திருப்பூர் தெற்கு எம் எல் ஏ திறந்து வைத்தார். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 November 2022

திருப்பூர் காலேஜ் ரோடு ஐயப்பன் கோவில் முன்பு உயர்மட்ட நிழற்கூறையினை திருப்பூர் தெற்கு எம் எல் ஏ திறந்து வைத்தார்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ 31.50 லட்சம் மதிப்பீட்டில் திருப்பூர் காலேஜ் ரோடு ஐயப்பன் கோவில் முன்பு உயர்மட்ட நிழற்கூறையினை திருப்பூர் தெற்கு எம் எல் ஏ திறந்து வைத்தார்.

திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட காலேஜ் ரோடு ஐயப்பன் கோயிலுக்கு கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் திருப்பூர் சுற்றியுள்ள பெரும்பாலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து மாலை அணிந்து ஐயப்பன் மலைக்கு செல்வார்கள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதை கருத்தில் கொண்டு திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் MLA அவர்கள் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2021- 2022 ல் ரூ 31,50 லட்சம் மதிப்பீட்டில் கோவிலின் முன்பு உயர்மட்ட நிழல் கூரை அமைக்கும் பணியினை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு துவக்கி வைத்து பணிகள் நடைபெற்று வந்தது பணிகள் முடிவடைந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் MLA திறந்து வைத்தார்.


இந்த நிகழ்வில் தெற்கு மாநகரச் செயலாளர் டி கே டி மு. நாகராசன் மரியாதைக்குரிய மாநகர மேயர் என் . தினேஷ் குமார் துணை மேயர் எம். பாலசுப்ரமணியம் எஸ். திலக்ராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad