பல்லடம் சட்டமன்ற தொகுதியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன் புதன்கிழமை காலை பருவாய் ஊராட்சியில் துவங்கி மக்கள் சந்திப்பு பயணம் மற்றும் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏராளமான மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நூற்றுக்கணக்கானோர் மனு கொடுத்தனர் மேலும் பல்லடத்தின் மேற்கு பகுதியில் இருக்கிற ஏழு ஊராட்சிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது இந்த ஊராட்சிகளின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் இதுநாள் வரை அத்திக்கடவு குடிநீர் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வழங்காததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் இதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளோடு உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி எதிர்வரும் 5ஆம்தேதி கோவையில் ஊராட்சி மன்ற தலைவர்களோடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தார் மேலும் சமுதாய நலக்கூடங்கள் கட்டப்பட வேண்டும் முதியோர் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை எம் பி இடம் வைக்கப்பட்டது மல்லே கவுண்டன் பாளையம் ஊராட்சியில் பயனாளி ஒருவருக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவை வழங்கினார்.
இந்தநிகழ்வில் பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர் சிபிஐ(எம்) கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ முத்து கண்ணன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி மூர்த்தி பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர் பரமசிவம் ஒன்றிய குழு உறுப்பினர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment