திருப்பூர் நார்த் லயன்ஸ் கிளப் சார்பில் இலவச இரத்தம் (சர்க்கரை) பரிசோதனை முகாம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 20 November 2022

திருப்பூர் நார்த் லயன்ஸ் கிளப் சார்பில் இலவச இரத்தம் (சர்க்கரை) பரிசோதனை முகாம்.


திருப்பூர் வடக்கு பெரியார்காலனி பகுதியில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் நடத்தும் திருப்பூர் நார்த் லயன்ஸ் கிளப் சார்பாக இலவச ரத்தம் (சர்க்கரை) பரிசோதனை முகாம் (166)  20/ 11 /20 22 ஞாயிறு காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடந்தது இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது ரத்த த்தில் உள்ள சர்க்கரையின் அளவுகளை பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் திமுக வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் எம் எஸ் மணி அவர்களும் பிரகாஷ் அவர்களும் மற்றும் திருப்பூர் நார்த் லயின்ஸ் கிளப் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட திமுக வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் எம் எஸ் மணி அவர்கள் கூறியதாவது மனிதர்களுக்கு சர்க்கரை நோய் என்பது மிகவும் சவாலாக உள்ள நிலையில் பாமர ஏழ்மை மக்கள் தங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை பெரும்பாலும் தெரிந்து வைத்துக் கொள்வதில்லை காரணம் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதே ஆகையால் இது போன்ற சேவை அமைப்புகள் நடத்தும் இலவச முகாம்களை பயன்படுத்தி இலவசமாக உடலை பரிசோதனை செய்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad