திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி குழந்தைகளுக்கெ திராக பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் தலைமையில் காவலர்களுடன் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம் குறித்து பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது, மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் ஏதும் நடந்தால் அது பற்றி தெரிய வந்தால் தாமதம் இல்லாமல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கும் இலவச தொலைபேசி எண் 1098 பற்றி பள்ளி குழந்தைகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


No comments:
Post a Comment