திருப்பூர் பூங்கா நகர் பகுதியில் காலை 10:30 மணி அளவில் மண் லோடு ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி சென்றது திடீரென்று லாரியின் பின்பக்க சக்கர பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

பொக்கலின் எந்திரம் கொண்டு வரப்பட்டு லாரியை தூக்கி நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள் வீரபாண்டி பிரிவிலிருந்து கோவில் வழி செல்லும் சாலையில் இந்த விபத்து நடந்ததால் விபத்து நடந்த நேரத்தில் வாகன போக்குவரத்து மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

No comments:
Post a Comment