திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் சார்பாகவும் திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அளவு 2 இணைந்து பல்லடம் பஸ் நிலையத்தில் ஒரு தடவை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டியும் மஞ்ச பையை பயன்படுத்த வேண்டியும் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நாட்டு நலப் பணி திட்டம் ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் பிளாஸ்டிக் தவிர்ப்பு பற்றி பொதுமக்களுக்கு விரிவாக விளக்கி கூறினார் பிறகு மாணவ செயலர்கள் அருள்குமார் அரவிந்தன் ரமேஷ் ஆகியோர் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து பஸ் நிலையத்தில் இருக்கும் பொது மக்களுக்கு மஞ்சப்பைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தொண்டு பிரசுரங்கள் வழங்கி பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment