திருப்பூரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையத்தை அப்புறப்படுத்தி விட்டு அங்கு புதியதாக ரூ 38.81 மதிப்பீட்டில் ஸ்மார்ட் பேருந்து நிலையம் மற்றும் ரூ.19.07 மதிப்பீட்டில் பல அடுக்கு வாகன நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது.
மேலும் தென்னம்பாளையம் வார சந்தையில் ரூ 12 .86 மதிப்பிலான கட்டிடம் ரூ4.69 கோடி மதிப்பில் ஆன மலர் சந்தை உள்ளிட்ட புதிய கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார், இது தொடர்பாக திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ் வினித் ஐஏஎஸ் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் மாநகராட்சி மரியாதைக்குரிய மேயர் என்.தினேஷ்குமார் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி ஐஏஎஸ் அரசு அதிகாரிகள் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment