இந்தியில் பெயர் பலகை பொருத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெற்கு தொகுதி எம்எல்ஏ, தெற்கு மாநகர செயலாளர், மேயர், ரயில் நிலைய அதிகாரியிடம் கடிதம் கொடுத்தனர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 November 2022

இந்தியில் பெயர் பலகை பொருத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெற்கு தொகுதி எம்எல்ஏ, தெற்கு மாநகர செயலாளர், மேயர், ரயில் நிலைய அதிகாரியிடம் கடிதம் கொடுத்தனர்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் தமிழை மறைத்து விட்டு இந்தியில் பெயர் பலகை பொருத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெற்கு தொகுதி எம்எல்ஏ, தெற்கு மாநகர செயலாளர், மேயர், ரயில் நிலைய அதிகாரியிடம் கடிதம் கொடுத்தனர்.


திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு சேவை மையத்தில் வாடிக்கையாளர் சேவை மையம் அறையின் முன்புறம் தமிழில் சேவை மையம் என்று பெயர் பலகை இருந்தது அதுபோல் ஆங்கிலத்திலும் இந்தியில் அந்தந்த மொழியில் ஒன்றன் பின் ஒன்றாக எழுதப்பட்டிருந்த பெயர் பலகை மேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று சகயோக் என்று ஆங்கிலம் ஹிந்தி தமிழ் என்று வரிசைப்படுத்தி புதிய பெயர் பலகையை பொருத்திவிட்டனர்.


ஆகையால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் தெற்கு தொகுதி திமுக கழக சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் MLA அவர்கள் வழங்கிய கடிதத்தை தெற்கு மாநகர செயலாளர் தொமுச மாநில துணைச் செயலாளருமான டி கே டி மு நாகராசன் மற்றும் மரியாதைக்குரிய திருப்பூர் மாநகர மேயர் என் தினேஷ் குமார் அவர்களும் வழங்கினார்கள் உடன் மாவட்ட பகுதி கழக மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்  

No comments:

Post a Comment

Post Top Ad