திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டலம் 25 ஆவது வார்டு கழிவுநீர் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் வீடுகளுக்கு முன்பு கழிவுநீர் தேங்கி நின்றால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர் இதை மேயர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
உடனடியாக மாநகர மேயர் என் தினேஷ்குமார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார், உடன் ஒன்னாவது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் 25 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் தங்கராஜ் மற்றும் சுகாதார அதிகாரிகள் இருந்தனர் உடனடியாக கழிவுநீர் உறிஞ்சி சுத்தம் செய்யும் லாரியை வரவழைத்து உடனடியாக கழிவு நீர் அடைப்புகளை போக்கி சுத்தம் செய்யப்பட்டது.

மேலும் வரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண 1வது மண்டல தலைவருடன் 25வது மாமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகளுடனும் மேயர் ஆலோசனை செய்தார்.

No comments:
Post a Comment