திருப்பூரில் புதியதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் மேயர் அதிகாலையில் திடீர் ஆய்வு! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 24 November 2022

திருப்பூரில் புதியதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் மேயர் அதிகாலையில் திடீர் ஆய்வு!


திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிலையம்  இரண்டு நாட்களுக்கு முன்பு மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளிகாட்சி மூலம் திறக்கப்பட்டது இன்று அதிகாலை 5.30 மணி அளவில்  மரியாதைக்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் என் தினேஷ்குமார் அவர்கள் திடீரென ஆய்வுக்கு சென்றார் அப்போது பேருந்து நேரம், பேருந்து  நிறுத்தத்தில் சுகாதாரம், கழிவறை சுகாதாரம், போக்குவரத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு மேற்கொண்டார்.

மேலும் பேருந்து நடத்துனர்கள், ஓட்டுநர்கள்,  பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பயணிகள் என அனைவரிடமும் கருத்துக்களை கேட்டு அறிந்தார் பேருந்து நிலையத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள அறிவுருத்தினார் இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன் உதவி ஆணையர் வாசுகுமார் (பொ)  மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர் மேயரின் இந்த நடவடிக்கை வரும் காலங்களில் பேருந்து நிலையத்தை அடிக்கடி ஆய்வு செய்வார் என்று தோன்றுகிறது என பொதுமக்கள் கூறினர் 

No comments:

Post a Comment

Post Top Ad