தமிழக அரசின் உத்தரவின்பேரில் தமிழகமெங்கும் போதை பொருட்களை ஒழித்திடவும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் பற்றியும் பல் வேறு வகைகளில் அரசு அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் இடையே மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி இ ஆ ப அவர்கள் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இன்று (23/11/2022 ) தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ரா பாலசுப்பிரமணியம் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் மாணவர்கள் போதை பொருட்களின் தீமைகளை பற்றி எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்திக்கொண்டு மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருந்து ரயில் நிலையம் வரை பேரணியாக சென்று போதை பொருட்களின் தீமைகள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


No comments:
Post a Comment