திருப்பூரில் திரும்பிய பக்கமெல்லாம் இந்தி எதிர்ப்பு பரப்புரை. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 4 November 2022

திருப்பூரில் திரும்பிய பக்கமெல்லாம் இந்தி எதிர்ப்பு பரப்புரை.

திருப்பூரில் திரும்பிய பக்கமெல்லாம் இந்தி எதிர்ப்பு பரப்புரை மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து ரயில் நிலையம் பெரியார் அண்ணா சிலை முன்பு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில் அதற்கு முன்பாக திருப்பூர் மாநகர 10வது வார்டு பகுதியில் திருப்பூர் மாநகர மேயர் என் தினேஷ் குமார் தலைமையில் பொதுமக்களிடம் ஏன் இந்தியை எதிர்க்கிறோம் என்று விளக்கவுரை நிகழ்த்தி துண்டறிக்கை கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் மற்றும் பகுதி திமுகழக செயலாளர் கொ. ராமதாஸ்  10 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு 14வது வார்டு வட்ட கழக செயலாளர் மு. ரத்தினசாமி மற்றும் மகளிர் அணியினர் 10 வது வார்டு திமுகழக பொறுப்பாளர்கள் மற்றும் திமுகழக‌ தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் இடையே ஏன் இந்தியை எதிர்க்கிறோம் என்று விளக்கவுரை பரப்புரை செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad