திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் யூனியன் பில் சாலை ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய செல்வராஜ் தலைமையில் தெற்கு மாநகர செயலாளர் டிகேடிமு நாகராசன் மற்றும் மாநகர மேயர் என் தினேஷ் குமார் ஆகியோர் பங்குபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் பா செல்வராஜ், திமுக பேச்சாளர் ஜின்னா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்திற்கு திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொமுச நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment