விடாத மழையிலும் கொத்தாக பறிமுதல் செய்த இரண்டு டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் டீம் கோவை, திருப்பூர் மாவட்டத்தை இணைக்கும் பகுதியான காரணம் பேட்டை பகுதியில் குட்கா கடத்தப்படுவதாக பல்லடம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான தனிப்படை போலீசார் இடைவிடாது கொட்டி தீர்த்த கன மழையிலும் 5 வாகனங்களோடு சென்று இரண்டு டன் 100 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் கடத்தப்பட்டதை கண்டறிந்து வாகனங்களை மறித்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கொத்தாக பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

ல்லடம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த்ராஜ் (வயது 25) கன்னியாகுமரியை சேர்ந்த ஜான்சஜு (வயது 30) கோவில்பட்டியைச் சேர்ந்த கவின் (வயது 24) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர் இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பல்லடம் பகுதியில் கொட்டிய கன மழையிலும் விடாது இரண்டு டன்னுக்கு மேற்பட்ட குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த பல்லடம் காவல்துறையினரை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

No comments:
Post a Comment