சோதனை மனம் நொந்த மக்களின் தற்கொலை முயற்சியை தடுக்க காவல்துறையினர் சோதனை! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 7 November 2022

சோதனை மனம் நொந்த மக்களின் தற்கொலை முயற்சியை தடுக்க காவல்துறையினர் சோதனை!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும்  மக்கள் குறை தீர்ப்பு நாள் நடைபெறும் இந்த குறை தீர்ப்பு நாளில் பலதரப்பட்ட மக்கள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து உரிய நிவாரணத்தை பெறுவார்கள் சில நேரங்களில மோசடி பேர்வழிகளிடம் அவர்களின் ஆசை வார்த்தையை கேட்டு மயங்கி பணத்தை இழந்து நிலத்தை இழந்து கடனில் சிக்கி மனம் துவண்டு தன்னால் முடியாத நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க  வரும் பொழுது சிலர் மண்ணெண்ணெயை தண்ணீர் பாட்டில்களில் கேன்களில் மறைத்து கொண்டு வந்து தங்கள் மீது ஊற்றி தற்கொலை முயற்சி செய்கிறார்கள்.

ஆதலால் இன்று நடை பெற்ற குறை தீர்க்கும் நாளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களை திருப்பூர் தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமசாமி அவர்கள் தலைமையில் காவலர்கள் தண்ணீர் பாட்டில் உள்பட தீவிர பரிசோதனை செய்து அலுவலகத்தின் உள்ளே அனுப்பினார்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad