திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி இஆப அவர்கள் 30/11/2022 அன்று 3 வது மண்டலம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் திருப்பூர் மாநகராட்சி 3 வது மண்டலம் வார்டு எண் 33 ல் உள்ள மூனிக் குளத்தில் அம்ரூத் l l திட்டத்தின் கீழ் ரூ 60 லட்சம் மதிப்பீட்டில் குளத்தின் கரை பகுதிகள் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் அங்கு ஆய்வு மேற்கொண்டார் மேலும் வார்டு 50 அமராவதி பாளையத்தில் இருந்து காட்டுப்பாளையம் மெயின் ரோடு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மண்டலம் இரண்டு 32 வது வார்டில் புது ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் தரம் மற்றும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
No comments:
Post a Comment