திமுகழகத்தின் முகவர்களுக்கான கூட்டம் (BLA2) திருப்பூர் பகுதியில் அனைத்து வார்டுகளிலும் நடைபெற்றது, அந்த வகையில் திருப்பூர் வடக்கு மாவட்டம் தெற்கு மாநகரத்திற்கு உட்பட்ட 26 மற்றும் 27 வது வார்டுக்குபட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் (BLA2) கூட்டம் சாமுண்டிபுரம் திமுக கிளை அலுவலகத்தில் தொமுச மாநில துணை செயலாளரும், திருப்பூர்தெற்கு மாநகர திமுக செயலாளருமான TKT மு. நாகராசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தேர்தல் காலங்களில் முகவர்களின் செயல்பாடுகள் பற்றியும் திமுக கழக நிர்வாகிகள் தொண்டர்களின் செயல்பாடுகள் பற்றியும் பலதரப்பட்ட விஷயங்கள் கலந்தாய்வு செய்யப்பட்டு ஆலோசனை கூறப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி பகுதி கழக செயலாளர் மின்னல் நாகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் குண ராஜன், வட்ட கழக செயலாளர் தீப்பெட்டி ரவி, வெங்கடேஷ் உள்ளிட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment