திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில் நான்காவது குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணிகள் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வழிமுறைகள் கழிவு நீர் சாக்கடைகள் பற்றி ஆய்வு செய்த திருப்பூர் மாநகர மேயர்! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 5 November 2022

திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில் நான்காவது குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணிகள் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வழிமுறைகள் கழிவு நீர் சாக்கடைகள் பற்றி ஆய்வு செய்த திருப்பூர் மாநகர மேயர்!

திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் எட்டாவது வார்டு மும்மூர்த்தி நகர் கருப்பராயன் நகர் பகுதியில் நடைபெற்று வரும் நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வழிமுறைகள் மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகள் குப்பை கொட்டும் இடங்கள் கழிவு நீர் வடிகால்கள் மற்றும் அடிப்படை வசதிகளை பற்றி திருப்பூர் மாநகராட்சி மேயர் என் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பகுதிகளை சுத்தம் செய்திடவும் சுகாதார பணியாளர்களுக்கு உத்தரவிட்டார், இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், எட்டாவது வார்டு மாமன்ற உறுப்பினர் வேலம்மாள் காந்தி, ஜோதி,  வெள்ளைச்சாமி, மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad