திமுக கழகத்தின் மறைந்த பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 101 வது பிறந்தநாள் முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்டம் திமுக கழகம் சார்பில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்களின் தலைமையில் அவரது இல்லத்தின் முன்புறம் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருஉருவப்படம் நிறுவப்பட்டு படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்.
பின்னர் பொதுமக்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர் தொமுச மாநில துணை தலைவருமாகிய டி கே டி மு. நாகராசன் மரியாதைக்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் என் தினேஷ்குமார் எஸ்.திலக்குமார் மாநகராட்சி 2 வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் 22வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் V. ராதாகிருஷ்ணன் , மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் M.S.மணி, சிவபாலன் மற்றும் மாநில மாவட்ட மாநகர பகுதி வட்ட கழக நிர்வாகிகள் சார்பு அணி களின் துணை அமைப்பாளர்கள் தொமுச பேரவை நிர்வாகிகள், இன்னாள் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், மகளிர் அணியினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment