இன்று காலை வழக்கம் போல் சந்திராமணி சுமார் 5 மணிக்கு எழுந்து வீட்டின் முன்பக்க கேட்டை திறந்து வைத்துவிட்டு உணவு தயாரித்துக் கொண்டிருந்தவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த கணவர் முத்துசாமி சென்று பார்த்த போது கழுத்து அறுபட்ட நிலையில் ரத்தம் வெள்ளத்தில் சந்திராமணி சடலமாக கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல் நிலைய அதிகாரிகள் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதை எடுத்து போலீசார் அந்த வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது சுமார் 55 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் வீட்டிற்குள் சென்று விட்டு சிறிது நேரத்தில் வெளியேறிய காட்சி பதிவாகி இருந்தது சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர் அதிகாலையில் நடந்த இந்த கொலை சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment