திருப்பூரில் மாநகராட்சி பள்ளிக்கு ஈஷா கார்மெண்ட்ஸ், குர்பானி டிரஸ்ட் சார்பில் மேயரிடம் நன்கொடை வழங்கினார்கள் மாநகராட்சி மேயர் என்.தினேஷ் குமார் அவர்களிடம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 45-வது வார்டு நொய்யல் வீதியில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளியில் வடிகால் கட்டும் பணிகளுக்கு ரூ.3,03,600 பங்களிப்பு தொகையிற்கான காசோலையினை, ஈஷா கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த அப்துல்லா அவர்களும் குர்பானி ட்ரஸ்ட் செயலாளர் அகமது பைசல் அவர்களும் வழங்கினார்கள்.
திருப்பூர் மாநகரத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பெரிதும் பங்காற்றி வரும் நல்உள்ளங்களுக்கு திருப்பூர் மாநகர மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் என்று திருப்பூர் மாநகராட்சி மேயர் என்.தினேஷ்குமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment