திருப்பூர் மாநகராட்சி 16வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருப்பவர் தமிழ்ச்செல்வி கனகராஜ் இவர் தனது வார்டை முதன்மை வார்டாக மாற்றும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் தினமும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் காலை வீடுகளுக்கு சென்று குப்பைகளை நேரடியாக சேகரித்து அதனை உடனுக்குடன் வார்டை விட்டு வெளியேற்றி வருகின்றனர் இதனால் 16வது வார்டில் எங்கும் குப்பைகள் இல்லாமல் சுத்தமாக சுகாதாரமாக காணப்படுகிறது இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பேசிய மேயர் தினேஷ் குமார் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 16வது வார்டில் குப்பைகளை சேகரிப்பதில் எடுக்கப்பட்டுள்ள இந்த புதிய முயற்சிக்கு கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கனகராஜுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இதனை தொடர்ந்து கூட்டத்தில் இருந்த அனைத்து கவுன்சிலர்களும் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர் இது சார்பாக கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கனகராஜ் கூறியதாவது 16வது வார்டில் பொதுமக்கள் சுகாதாரமாக வாழ்வதற்கு ஏற்ற வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது குப்பைகளை தினதோறும் சேகரித்து உடனுக்குடன் வார்டை விட்டு அப்புறப்படுத்தபட்டு வருகிறது இந்த முயற்சியை மாமன்ற கூட்டத்தில் பாராட்டு தெரிவித்த மேயர் அவர்களுக்கும் அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் தனக்கு ஒத்துழைப்பு தரும் சுகாதார பணியாளர்கள் மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் மற்றும் 16 வது வார்டு பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
No comments:
Post a Comment