தாராபுரம் புனித அந்தோணியார் பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு, கூட்டுத் திருப்பலி நடைபெற்றது, 1000, கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, புனித அந்தோணியார் பேராலயத்தில் இன்று இரவு சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இரவு 10. 30 மணியளவில் நன்றி அறிவிப்பு வழிபாடும், இரவு 11 மணியளவில் பேராலய அதிபர் கனகராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றன.
முன்னதாக, பாதிரியார்களின் திருப்பலி ஆயத்த பவனி நடைபெற்றது. அப்போது, பாதிரியார்களுக்கு மரியாதை செய்து, ஆரத்தி எடுத்தனர். பேராலய அதிபர் கனகராஜ் மேடையில் வைக்கப்பட்டிருந்த திருவிளக்கை ஏற்றி, நள்ளிரவு 12. 01-க்கு ஆங்கில புத்தாண்டுப் பிறப்பை அறிவித்தார். திருப்பலியில் பங்கேற்ற மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் இதில் 1000, க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment