விவசாயத்திற்காக விவசாயிகளுக்காக அரும்பாடுபட்டு இலவச மின்சாரம் விவசாய கடன் தள்ளுபடி விவசாய பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் போன்ற பல போராட்டங்கள் செய்து அதில் வெற்றியும் கண்ட உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அய்யா அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி திருப்பூரில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது மௌன அஞ்சலி செலுத்திய பிறகு அய்யாவின் திருவுருவப் படத்திற்கு நிறுவனத் தலைவர் ஜி. கே. விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட ,மாநகர, நகர, ஒன்றிய சங்க நிர்வாகிகள் மகளிர் அணியினர் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அய்யா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment