திருப்பூரில் திமுக கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்( BLA 2) மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 December 2022

திருப்பூரில் திமுக கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்( BLA 2) மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.


திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளருமான க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் திருப்பூர் தெற்கு மாநகர செயலாளரும், தொமுச மாநில துணைச் செயலாளருமான டி கே டி மு. நாகராசன் தலைமையில் திருப்பூரில் திமு  கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் (BLA 2) மற்றும் திமுகழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாநகர 31 வார்டுகளில் நடைபெற்றது.

இதையொட்டி திருப்பூர் தெற்கு மாநகரத்திற்குட்பட்ட 31 வார்டுகளிலும் நடந்து முடிந்த நிலையில் இந்த கூட்டங்களில் கலந்து கொண்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கும் மற்றும் திமுகவின் நிர்வாகிகளுக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டும் பெறப்பட்டும் நடைபெற்றது, இந்த கூட்டங்களில் கலந்து கொண்ட மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட திமுகழக அனைத்து நிர்வாகிகளுக்கும் திருப்பூர் தெற்கு மாநகர கழக செயலாளரும் தொமுச மாநில துணைச் செயலாளரு மான TKT. மு. நாகராசன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad