தமிழக முதல்வர் இன்று திருப்பூருக்கு வருகை அவிநாசியில் பிரமாண்டமாக வரவேற்பு அளிக்க திருப்பூர் தெற்கு எம்எல்ஏ ஏற்பாடு!. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 December 2022

தமிழக முதல்வர் இன்று திருப்பூருக்கு வருகை அவிநாசியில் பிரமாண்டமாக வரவேற்பு அளிக்க திருப்பூர் தெற்கு எம்எல்ஏ ஏற்பாடு!.

திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் டாலர் பாலு என்கின்ற பாலசுப்ரமணியம் இல்ல திருமண விழாவிற்கு பங்கேற்க தமிழக முதல்வர் திமுக கழக தலைவருமான மு க ஸ்டாலின் 3/12/2022 இன்று மாலை 4 மணியளவில் வருவதையொட்டி திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுகழக செயலாளருமான க. செல்வராஜ் MLA தலைமையில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பாக அவிநாசி பைபாஸ் ரோடு அன்னபூர்ணா ஹோட்டல் அருகில்  இன்று மாலை 4 மணி அளவில்  பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் மாவட்ட மாநகர பகுதி வட்ட கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் தொமுச பேரவை நிர்வாகிகள் மண்டல தலைவர்கள் இந்நாள் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் கழக உடன்பிறப்புகள்  தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என திருப்பூர் தெற்கு மாநகர திமுகழகம் சார்பாக திருப்பூர் தெற்கு மாநகர செயலாளரும் தொமுச மாநில துணை செயலாளருமான டி கே டி மு நாகராசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad