திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாதம் ஒரு தடவை கேஸ் நுகர்வோர்களுக்கு உண்டான குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்று கொண்டு வந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் தலைமையில் மாவட்ட வழங்கள் அலுவலர் மகாராசன் முன்னிலையில் எரிவாயு சிலிண்டர் விநியோக பிராந்திய அதிகாரிகள் எரிவாயு சிலிண்டர் விநியோக ஏஜென்சிகள், தாலுகா சப்ளை அதிகாரிகள், மாவட்டத்தின் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் பிரதிநிதிகள் S.காதர் பாட்சா ,சண்முகசுந்தரம், மணிக்குமார், கிறிஸ்டோபர், கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கம் மற்றும்சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள 2022 நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது நுகர்வோர் நலன் கருதி பல குறை தீர்ப்பு கோரிக்கைகளை நிறைவேற்றி தர நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர்கள் அதிகாரிகளிடம் முன் வைத்தனர் அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கைகள் எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர்.
தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர் S.காதர் பாட்ஷா தனது விவாதத்தில் சமையல் அறையை மகளிர்கள் சுகாதாரமாக வைத்திருக்கும் நிலையில் அழுக்கு படிந்த நிலையில் சிலிண்டர்களை தண்ணீர் விட்டு கழுவாமல் தொடர்ந்து சிலிண்டர்களை உபயோகிப்பது ஏற்புடையது அல்ல என்றும் நுகர்வோர்களை கவரும் வகையில் தேசிய உலக நுகர்வோர் உரிமை தினங்களில் கேஸ் சிலிண்டர்கள் மூலம் விபத்தை தழுவாமல் இருக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களை கேஸ் விநியோகஸ்தர்கள் ஆங்காங்கே நடத்த வேண்டும் என தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர் S.காதர் பாட்ஷா கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment