திருப்பூர் மாவட்டம் உடுமலை கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை பேருந்து நிலையம் அமைந்துள்ளது இங்கு தினமும் தொலைதூரப் பேருந்துகள், சுற்று வட்டார கிராமங்களுக்கு பேருந்துகள் இங்கு வந்து செல்கின்றன.
ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்கின்றனர் அவர்கள் பேருந்துக்காக காத்திருக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன மேலும் அவர்கள் காத்திருக்கும் இடத்தில் நடைபாதை கடைகள் அமைக்கப்பட்டு வழித்தடங்களை ஆக்கிரமிப்பு சிலர் செய்துள்ளனர் மேலும் மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் முன்புறம் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதுவும் பயணிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் எனவே தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒழுங்கு படுத்த உடுமலை நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும்.
No comments:
Post a Comment