உடுமலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆதரவற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 December 2022

உடுமலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆதரவற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.


உடுமலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆதரவற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

தமிழகத்தில் திரைப்பட நடிகர் விஜய் அவர்களின் விஜய் மக்கள் இயக்கம் தமிழகத்தில் பல்வேறு நற்பணிகள் செய்து வரும் நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடிகர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் (EX MLA) அவர்களின் ஆலோசனைப்படி திருப்பூர் தெற்கு மாவட்ட தொண்டர் அணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாகவும் உடுமலை நகர தொண்டரணி சார்பாகவும் உடுமலை தெற்கு ஒன்றிய தொண்டரணி சார்பாகவும் தற்போது பணி மற்றும் குளிர்காலம் என்பதால் உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள ஆதரவற்ற பொதுமக்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட தொண்டர் அணி நிர்வாகிகள் மற்றும் உடுமலை நகர தொண்டரணி நிர்வாகிகள் உடுமலை தெற்கு ஒன்றிய தொண்டரணி நிர்வாகிகள் உடுமலை நகர இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் பகுதி கிளை மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் 

No comments:

Post a Comment

Post Top Ad