திருப்பூர் மாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன் பூண்டி ராக்கியாபாளையம் பகுதியில் தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையத்தினை மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் புதிய காவல் நிலையத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் மரியாதைக்குரிய மாநகராட்சி மேயர் என் தினேஷ்குமார் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் மாநகர துணை காவல் ஆணையர்கள் அபிநவ் குமார், வனிதா மற்றும் காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment