திருப்பூர் மாநகராட்சி மேயர் என்.தினேஷ்குமார் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி இஆப, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மக்களுக்கான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, இந்தியாவிற்கே முன்னோடியான பல்வேறு சிகிச்சை தொழில்நுட்பங்களை கொண்டு திருப்பூரில் அமைய உள்ள புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற உள்ள walkathon marathon நிகழ்விற்கான பங்களிப்பு தொகையாக மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய மாமன்ற கூட்ட அமர்வு படி தொகையினை வழங்கினார்கள், தொகையினை வழங்கிய மாமன்ற உறுப்பினர்களுக்கு மேயர் தினேஷ் குமார் நன்றி பாராட்டினார்.
No comments:
Post a Comment