தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்களின் தலைமையில் 24/12/2022 காலை 8 மணி அளவில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் துவங்கும் பேரவை நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என திருப்பூர் தெற்கு மாநகர கழகம் சார்பாக தொமுச மாநில துணை செயலாளரும் தெற்கு மாநகர செயலாளருமான டி.கே.டி.மு நாகராசன் அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment