தமிழகத்தில் வட இந்தியர்கள் வேலைக்காக வருவது நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் திருப்பூர் மக்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலையில் வட இந்தியர்களுக்கு நுழைவு அனுமதி சீட்டு (Inner line permit) முறையை நடைமுறை படுத்த வலியுறுத்தி திருப்பூர் நாம் தமிழர் கட்சி வடக்கு, தெற்கு மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருண் ஜெயசீலன் அவர்கள் கண்டன உரையாற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி மாநில மாவட்ட மாநகர நகர ஒன்றிய மற்றும் அனைத்து பாசறை நிர்வாகிகள் , மகளிர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment