திருப்பூரில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நற்செய்தி விழாவில் திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க. செல்வராஜ் கிறிஸ்துவ மக்களுடன் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினார். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 December 2022

திருப்பூரில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நற்செய்தி விழாவில் திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க. செல்வராஜ் கிறிஸ்துவ மக்களுடன் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.


திருப்பூரில் ரயில் நிலையம் குமரன் சிலை அருகில் இயேசு விடுவிக்கிறார் வாலிபர் ஊழியங்கள் மற்றும் இயேசுவின் புது வாழ்வு ஊழியங்கள் இணைந்து நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பு விருந்தினராக திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு  திமுக கழக மாவட்ட செயலாளருமான க.செல்வராஜ் கலந்துகொண்டார்.

உடன் 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் டிஜிட்டல் சேகர் கழகப் பொறுப்பாளர்களும் மற்றும் இந்த நிகழ்வில் இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் பொறுப்பாளர் சகோ மரியா விக்டர் மற்றும் இயேசுவின் புதுவாழ்வு ஊழியத்தின் ஸ்தாபகர் சகோ ஜோசப் சுப்பிரமணி சிறப்பு விருந்தினரை வாழ்த்தி கௌரவித்து பிரார்த்தனை செய்து விழாவினை ஆரம்பித்து வைத்தனர்.


சகோ அன்புராஜ் சகோ தேவா சகோ டேவிட் ஜாக் சகோதரி மெர்சி சகோதரி ஐஸ்வர்யா மற்றும் அநேக தேவப் பிள்ளைகள் கலந்து கொண்டு 5000 கேக் மற்றும் 2500 இயேசுவின் கை பிரதிகளும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள் இதில் திறப்பின் வாசல் ஊழியங்கள் சகோ தேவ நேசன் கலந்து கொண்டார் 


நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் (மத்திய திமுக) சகோ கே வி  ஜோசுவா தண்டபானி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களுக்கு கேக்குகள் வழங்கி கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad