பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கை பகுதியில் கிபி 1780 முதல் 1783 வரை ஆட்சி செய்தவரும் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண் விடுதலை போராட்ட வீராங்கனை யுமாகிய இராணி வேலு நாச்சியார் அவர்களின் 226 வது நினைவு நாள் புகழ் அஞ்சலியை திருப்பூர் நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் பழ சிவகுமார் திருப்பூர் தெற்கு தொகுதி செயலாளர் செந்தமிழ் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இரா.சிவ சங்கர் (வீர தமிழர் முன்னணி) கா. பாபு, பெ. உதயச்சந்திரன், வி. திருமாவளவன், வி. சக்திவேல், அ.காசாமைதீன் (கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை), அதிரடி ச. அருணாசலம் (வீரத் தமிழர் முன்னணி). டி. கோபால், பி.அனுசுயா, நாகராஜ், கண்ணன், சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வீர பெரும் பாட்டி வேலு நாச்சியார் அவர்களுக்கு புகழ் அஞ்சலி மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment