திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டலம் அவிநாசி சாலையில் பெரியார் காலனி கருப்பராயன் கோயில் எதிர்புறம் உள்ள திருப்பூரை நோக்கி செல்லும் பிரதான சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகளை உயிர்பலி வாங்க காத்திருக்கும் பெரும் குழிகள் இந்த சாலையில் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் நிலையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த குழிகளை கவனிக்காமல் வந்தால் தடுமாறி கீழே விழும் நிலைமை உள்ளது.
கனரக வாகனங்கள் மூலம் அவர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது நெடுஞ்சாலை துறையினர் பிரதான சாலைகளை பராமரிப்பது இல்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும் பல மாதங்களாக இந்த அவல நிலை நீடிக்கிறது பூண்டி மற்றும் குமார் நகர் பகுதிகளில் கலெக்டர் தங்கும் இல்லத்திற்கு எதிர்புறம் இப்படி பல்வேறு இடங்களில் இந்த நெடுஞ்சாலைத்துறைக்கு சம்பந்தப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக இது சீர் செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாகும்.
No comments:
Post a Comment