மக்களின் உயிருடன் விளையாடும் போலி மருத்துவர்கள் திருப்பூர் பல்லடத்தில் போலி பெண் மருத்துவர் கைது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 December 2022

மக்களின் உயிருடன் விளையாடும் போலி மருத்துவர்கள் திருப்பூர் பல்லடத்தில் போலி பெண் மருத்துவர் கைது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் குப்புசாமி நாயுடுபுரத்தில் ஒரு தனியார் மருந்து கடை செயல்பட்டு வந்தது இந்த கடையில் போலி மருத்துவர் சிகிச்சை அளிப்பதாக மாவட்ட சுகாதார நலப்பணி  துறையினருக்கு தகவல் கிடைத்தது அதை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் கனகராணி தலைமையில் தேசிய நலக் குழுமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அருண் பாபு பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சுடர்விழி   மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாக அலுவலர் முருகேசன் அலுவலக கண்காணிப்பாளர் ஹரி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர் அந்த மருந்து விற்பனை கடையில் ஆய்வு நடத்தினர்.

அப்போது அங்கு பணியில் இருந்த கோகிலா என்பவர் மருந்து கடையில் பின்புறம் தனி அறையில் நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி வந்தது தெரிய வந்தது அவரிடம் மருத்துவக் குழுவினர் அறிமுகம் ஆகும் பொழுது கோகிலா தன்னை மருத்துவர் எனக்கூறி அறிமுகம் ஆகி உள்ளார்.


அதன் பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் குப்புசாமி நாயுடுபுரம் லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்த சின்ராஜ் மனைவி கோகிலா (30) என்பது தெரியவந்தது அவர் மருத்துவம் சம்பந்தமான எந்த படிப்பும் படிக்கவில்லை என்றும் பள்ளிப் படிப்பை மட்டுமே படித்துள்ளார் என்பதும் தெரிய வந்தது மேலும் அவர் மருந்து கடைக்கு வரும் நோயாளிகளுக்கு ஊசி போடுவதும் காயங்களுடன் வருபவர்களுக்கு கட்டுப்போட்டு விடுவதும் மருந்துகளை கொடுப்பதும் செய்து வந்ததாக ஒப்புக்கொண்டு உள்ளார்.


நர்சிங் கிளினிக் நடத்த வேண்டும் என்றால் அதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும் உரிய அனுமதி இன்றியும் உரிய கல்வி இன்றியும் ஆங்கில மருந்துகளை கொண்டு அலோபதி மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போலி மருத்துவர் கோகிலா மீது பல்லடம் போலீசில் தேசிய நல குழுமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அருண் பாபு புகார் கொடுத்தார்.


அதைத் தொடர்ந்து போலீசார் கோகிலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் தனியார் மருந்து கடையை பூட்டி சீல் வைக்கப்பட்டது ஒரு சில ஆங்கில மருந்து கடைகளில் மருத்துவர் களுக்கு கொடுத்து அவர்கள் மூலம் மருந்து மாத்திரைகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு எழுதிக் கொடுத்து அதை தங்கள் கடைகளில் வாங்க வைத்து வருமானம் சம்பாதிக்கிறார்கள் இதற்கு தீர்வு காண மருந்து கடைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பதே சமூக‌ ஆர்வலர்களின் பொது மக்களின் கோரிக்கையாகும். 

No comments:

Post a Comment

Post Top Ad