திருப்பூர் மாநகராட்சி இது 60 வார்டுகளை கொண்ட ஒரு மாநகராட்சி ஆகும் இந்த வார்டுகளில் நடைபெறும் தார் சாலை சிமெண்ட் சாலை மற்றும் சாக்கடை பாலங்கள் வேலைகளை சரியான முறையில் கலவை போட்டு செய்வதில்லை என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு ஆகும் இந்த வேலைகளை பற்றி பல தடவை மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று புகார் அளித்து திரும்ப அந்த வேலைகளை சரி செய்யும் நிலைமை தான் உள்ளது, இது தொடர் நிகழ்ச்சியாக உள்ளது மேலும் மாநகராட்சி பணிகள் நடக்கும் இடங்களில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணிப்பது இல்லை என்பது பொதுமக்கள் வைக்கும் குற்றச்சாட்டு இது உண்மை என்று மேயர் ஆய்வில் தெரிய வந்துள்ளது திருப்பூர் நொய்யல் நதியின் இருபுறமும் சாலை அமைத்தல், கழிவுநீர் வடிகால் கட்டுதல், பாதுகாப்பு வேலி அமைத்தல் பணிகளை மரியாதைக்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் என்.தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
பணிகள் நடைபெறும் இடத்தில் மேற்பார்வையாளர்கள் (PMC அலுவலர்கள்) இல்லாத காரணத்தால் கலவையின் தரம் சரியாக இல்லாமல் காணப்பட்டது. மேயரின் உத்தரவின் பேரில் மாதிரி கலவை சேமிக்கப்பட்டு, கான்கிரீட் கலவையின் தரத்தை சோதிப்பதற்காக, ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது, மேலும் அதிகாரிகளிடம் பணிகளின் பொழுது கண்டிப்பாக மேற்பார்வையாளர்கள் பணி நடைபெறும் இடத்தில் இருந்து கண்காணிக்க வேண்டும் தரமான முறையில் பணிகளை செய்ய வேண்டும் என மேயர் என்.தினேஷ் குமார் அறிவுரை வழங்கினார்.
No comments:
Post a Comment